Home நாடு சஞ்சீவனுக்கு விரைவில் பழைய நினைவுகள் திரும்பிவிடும் – தந்தை உறுதி

சஞ்சீவனுக்கு விரைவில் பழைய நினைவுகள் திரும்பிவிடும் – தந்தை உறுதி

603
0
SHARE
Ad

P.-Ramakrishnan-at-Serdang-hospitalகோலாலம்பூர், ஆகஸ்ட் 30 – குற்றத்தடுப்பு ஆர்வலர் சஞ்சீவனுக்கு பழைய நினைவுகள் தப்பிப்போனது தற்காலிகமானது என்றும், இன்னும் சில காலங்களில் அவர் மீண்டும் தன் பழைய நினைவுகளைத் திரும்பப் பெற்றுவிடுவார் என்றும் அவரது தந்தை பி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது ஒரு ஆரம்பகட்ட நிலை தான், சரியாவதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகும். ஒரு வாரத்தில் சரியாகலாம் அல்லது 10 நாட்களில் சரியாகலாம் அல்லது இன்னும் தாமதமாகலாம். ஆனால் கட்டாயம் ஒருநாள் பழைய நினைவுகள் திரும்பிவிடும் என்று மருத்துவர்கள் கூறுவதாக ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வாரம் கோமா நிலையில் இருந்து நினைவு திரும்பிய சஞ்சீவனுக்கு அவரது தாய், தந்தையையே அடையாளம் தெரியவில்லை என்றும், ஆனால் அவர் அபாயக்கட்டத்தை தாண்டிய எண்ணி தான் மகிழ்வதாகவும் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“தற்போது சஞ்சீவனுக்கு நினைவு திரும்பினாலும் கூட அவரது தொண்டைப் பகுதியில் செலுத்தப்பட்டுள்ள குழாயின் காரணமாக அவரால் பேச முடியவில்லை. நாங்கள் எழுத்துக்களை எழுதிக் காண்பித்தால் அதை அடையாளம் காட்டுகிறார்” என்றும் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்நிலையில், சஞ்சீவன் பேசத் தொடங்கியவுடன் அவரிடம் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த காவல்துறை காத்திருக்கிறது. ஆனால் மருத்துவர்கள் அவர் எப்போது மருத்துவமனையில் இருந்து வெளியாகலாம் என்பதை உறுதியாகக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி, நெகிரி செம்பிலானில் உள்ள பாகாவ் சாலை சந்திப்பில், மோட்டாரில் வந்த இருவர் சஞ்சீவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவரது விலாவில் தோட்டாக்கள் பாய்ந்தது. இருப்பினும் சஞ்சீவன் மருத்துவ சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ளார்.