Home அரசியல் மெர்டேக்கா உணர்வோடு தேசிய முன்னணியுடன் பேசத் தயார்! – அன்வார் இப்ராகிம் அறிவிப்பு!

மெர்டேக்கா உணர்வோடு தேசிய முன்னணியுடன் பேசத் தயார்! – அன்வார் இப்ராகிம் அறிவிப்பு!

642
0
SHARE
Ad

cqtTwஆகஸ்ட் 31 – நாளை மலரும் சுதந்திர தின உணர்வோடு, தேசிய முன்னணியோடு, மலேசிய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து பேச்சு நடத்த தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த மே மாதம் நடந்த பொதுத் தேர்தல் மீது தனது கண்டனங்களை ஏற்கனவே தெரிவித்திருந்த அன்வார்இப்ராகிம், இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையொன்றில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நலன்களுக்காகவும் பக்காத்தான் ராயாட் கூட்டணி தேசிய முன்னணியோடு இருந்து வரும் கருத்து வேறுபாடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பக்காத்தான் ராயாட்டுக்கும், தேசிய முன்னணிக்கும் இடையில் ஒரு வட்டமேசை கலந்துரையாடலை பிரதமர் நடத்தி, பல்வேறு பிரச்சனைகள் குறித்த தீர்வுகளை ஒருமனதாக எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும் என்றும் அன்வார் தனது அறிக்கையில் கூறியிருக்கின்றார்.

தகுதியுள்ளவர்களுக்கு பாராட்டு வழங்கும் நோக்கில் தேசிய தினம் கொண்டாடப்பட வேண்டும் என்றும் கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்கவேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

“மெர்டேக்கா எனப்படும் சுதந்திர உணர்வு என்பது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துக் கொள்வதோ, பொறுமை காப்பதோ மட்டுமன்று. ஒருவருக்கொருவர் கொண்டிருக்க வேண்டிய பரந்த புரிந்துணர்வு, நம்மிடையே இருக்கும் வித்தியாசங்களையும், ஒற்றுமைகளையும் ஏற்றுக் கொள்வது, ஒரே நாடாக நம் முன்னால் இருக்கும் சவால்களை எதிர்நோக்க நாம் முன்னோக்கி முன்னேற வேண்டியதும் அவசியமாகும்” என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.