Home இந்தியா காங்கிரஸ் தலைமையிலான அரசு நாட்டிற்கு கல்லறை கட்டி வருகிறது: மோடி

காங்கிரஸ் தலைமையிலான அரசு நாட்டிற்கு கல்லறை கட்டி வருகிறது: மோடி

580
0
SHARE
Ad

அகமதாபாத், செப் 3- குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளாராக அறிவிக்க எதிர்பார்க்கப்படுகிறார்.

modi721இவர் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இதுகுறித்து பொடாட் என்னுமிடத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் மோடி கூறியதாவது:-

#TamilSchoolmychoice

திறமையற்ற ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அதிகாரத்திலிருந்து நாட்டை காப்பற்ற வேண்டிய கட்டாயமான நேரம் இது. இந்தியாவின் கஜானாவை அவர்கள் காலி செய்துவிட்டனர். மேலும் நாட்டை மிக மோசமான நிலைக்கு தள்ளி கல்லறை கட்டி வருகிறார்கள்.

நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. இதனால் நாட்டு மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் தலைமையிலான அரசு இழந்துவிட்டது.

பணத்தின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது, எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது அரசின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.