Home கலை உலகம் ஜோதிகாவிடம் பிடித்தவை: மனம் திறந்த சூர்யா

ஜோதிகாவிடம் பிடித்தவை: மனம் திறந்த சூர்யா

1096
0
SHARE
Ad

செப். 3- சூர்யா சினிமாவுக்கு வந்து 16 வருடங்கள் தாண்டுகிறது.

‘நேருக்கு நேர்’ படத்தில் அறிமுகமானார். நிறைய வெற்றி  படங்களில் நடத்து சிறந்த நடிகர் அளவுக்கு  வளர்ந்துள்ளார்.

‘சிங்கம் 2’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

#TamilSchoolmychoice

surya-jyothika-baby-boy-birthday-photos-7416திரையுரலக வாழ்க்கை பற்றி சூர்யா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறும்போது:–

சிறு வயதில் சினிமாவை பற்றி அதிகம் தெரியாது. படங்கள் மட்டும் பார்ப்பேன். கல்லூரியில் படித்தபோது அப்பா என்னை சொந்த தொழில் இறக்கி விரும்பினார்.

ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. என்னை நடிகனாக்க அப்பா விரும்பவில்லை. பிறகு தொழில் செய்ய தொடங்கினேன். அது எனக்கு சரியாக வரவில்லை.

அப்போது வஸந்த் ‘நேருக்கு நேர்’ படத்தை எடுக்க தயாரானார். அதில் விஜய்யும், அஜித்தும் நடிப்பதாக இருந்தது. திடீரென அஜித் நடிக்காததால் அந்த கேரக்டருக்கு நான் தேர்வானேன்.

surya-jothika-jillendru-oru-kaadhalநான் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இல்லை. இப்போதும் வளர்ந்து வரும் நடிகன்தான். இந்த துறையில் நிறைய சாதனைகள் செய்து என் பெற்றோரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம்.

என் மனைவி ஜோதிகாவிடம் எனக்கு பிடித்தது. அவரது கடின உழைப்பு ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் சேர்ந்து நடித்தோம். அப்போது நான் பெரிய நடிகன் இல்லை.

ஜோதிகா பிரபல நடிகையாக இருந்தார். எல்லோரிடமும் இயல்பாக பழககூடிய குணம் அவருக்கு இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.