Home One Line P2 பொன்மகள் வந்தாள்: ராட்சசிக்குப் பிறகு முன்னணி பாத்திரத்தில் ஜோதிகா!

பொன்மகள் வந்தாள்: ராட்சசிக்குப் பிறகு முன்னணி பாத்திரத்தில் ஜோதிகா!

931
0
SHARE
Ad

சென்னை: நடிகை ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ராட்சசி திரைப்படத்தின் மூலமாக ஜோதிகா இரசிகர்களின் அமோக பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தை ஜெஜெ பெட்ரிக் எழுதி இயக்குகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நடிகை ஜோதிகாவுடன் இப்படத்தில் இயக்குநர் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் பொத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.