Home One Line P2 “பொன்மகள் வந்தாள்” – பிரபலங்கள் நடிக்கும் முதல் “பெரிய” தமிழ்ப் படமாக இணையத்தில் வெளியானது

“பொன்மகள் வந்தாள்” – பிரபலங்கள் நடிக்கும் முதல் “பெரிய” தமிழ்ப் படமாக இணையத்தில் வெளியானது

879
0
SHARE
Ad

சென்னை – தமிழ் திரையுலகத்தின் பிரபல நட்சத்திரங்கள் நடித்து, சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் பெரிய முதலீட்டுடன் தயாரிக்கப்பட்டு, நேரடியாக அமேசோன் பிரைம், கட்டண இணையத் தளத்தில் வெளியிடப்படும் முதல் தமிழ் திரைப்படமாக “பொன்மகள் வந்தாள்” திகழ்கிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இன்று வெள்ளிக்கிழமை (மே 29) ‘பொன்மகள் வந்தாள்’ அமேசோன் பிரைம் தளத்தில் பதிவேற்றம் கண்டது. இதன் மூலம் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள இரசிகர்கள் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் இந்தப் படத்தைப் பார்த்து மகிழக் கூடிய சூழல் உருவாகியிருக்கிறது.

ஏற்கனவே, சில தமிழ்ப் படங்கள் இவ்வாறு கட்டண இணையத் தளங்களில் வெளியாகியிருந்தாலும், அவை சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்ட படங்களாகும். திரையரங்குகளில் வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் சிக்கலில் இருந்த நிலையில் கட்டண இணையத் தளங்களில் விற்கப்பட்ட படங்கள் இவையாகும்.

#TamilSchoolmychoice

ஆனால், முதலில் திரையரங்குகளில் திரையிடப்படுவதற்கெனவே எடுக்கப்பட்டு, திரையிடத் தயாராக இருந்தும், கொவிட்-19 பிரச்சனைகளால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், நேரடியாகவே கட்டண இணையத் தளத்திற்கு இந்தப் படம் விற்கப்பட்டிருக்கிறது.

சுமார் 45 மில்லியன் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம், 90 மில்லியன் ரூபாய் தொகைக்கு அமேசோன் பிரைமுக்கு விற்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

இந்தப் படத்தில் ஜோதிகா கதாநாயகியாகவும், பாக்கியராஜ், ரா.பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

அடுத்து : திரைவிமர்சனம் “பொன்மகள் வந்தாள்”