Home One Line P1 அமிருடின், அஸ்மின், ஹம்சா இடையே இரகசிய சந்திப்பு இல்லை

அமிருடின், அஸ்மின், ஹம்சா இடையே இரகசிய சந்திப்பு இல்லை

667
0
SHARE
Ad

ஷா அலாம்: சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி , அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் ஆகியோருக்கு இடையே நேற்று வியாழக்கிழமை (மே 28) எந்த இரகசிய சந்திப்பும் நடைபெறவில்லை.

அமிருடினின் அரசியல் செயலாளர் போர்ஹன் அமான் ஷா கூறுகையில், மதியம் சிலாங்கூர் மந்திரி பெசாரின் அதிகாரத்துவ இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பு, அமிருடின் மற்றும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு என்று தெரிவித்தார். மாநிலத்தில் கொவிட் -19 பாதிப்பை சமாளிக்கும் முயற்சிகள் குறித்து பேசப்பட்டதாக அவர் கூறினார்.

“புதிய நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு மாற்றியமைப்பதில் சிலாங்கூர் மாநில அரசு மற்றும் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்பு குறித்தும் இந்த விவாதம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

“இந்த சந்திப்பில் மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர், டாக்டர் சித்தி மரியா மஹ்முட், சுகாதார அமைச்சு மற்றும் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இரகசிய சந்திப்பு குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கிறோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.