Home One Line P2 “சீனத் தரப்புடன் நாங்களே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” – இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்

“சீனத் தரப்புடன் நாங்களே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” – இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்

657
0
SHARE
Ad

புதுடில்லி – சீன – இந்திய எல்லைப் பகுதிகளில் மோதல்கள் ஏற்பட்டு பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் சமரசம் செய்து வைக்கத் தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை இணையம் வழி  இந்திய வெளியுறவுத் துறையின் பேச்சாளர் அனுராக் ஸ்ரீவஸ்தாவா விளக்கம் அளித்தார்.

“எல்லைப் பதற்றத்தைத் தணிக்க நாங்களே சீனத் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறோம். எந்த நிலையிலும் இந்தியாவின் இறையாண்மையை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இராணுவ மற்றும் தூதரக நிலைகளின் வழியாக இருதரப்புகளிலும் பேச்சுவார்த்தைகளுக்கான நடைமுறைகளை நாங்கள் வழிவகுத்துள்ளோம் என்றும் கூறிய அனுராக் அமைதியான முறையில் பிரச்சனையைத் தீர்க்க உறுதி கொண்டுள்ளோம் என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

சீனாவுடனான ஒப்பந்தங்களுக்கேற்பவே, இந்தியத் துருப்புகள் எல்லைப் பகுதிகளில் தங்களின் பணிகளை ஆற்றி வருகின்றன என்பதையும் அனுராக் தெரிவித்தார்.