Home One Line P1 கொவிட்-19: ஒரே நாளில் 7 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர், பிரதமர் அறிவிப்பு!

கொவிட்-19: ஒரே நாளில் 7 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர், பிரதமர் அறிவிப்பு!

588
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று ஏழு புதிய கொவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பிரதமர் மொகிதின் யாசின் இன்று செவ்வாய்க்கிழமை வெளிப்படுத்தியுள்ளார்.

இது நாட்டின் மொத்த வழக்குகளின் எண்ணிக்கையை 36-ஆகக் கொண்டு வந்துள்ளது.

மலேசியாவில் கொவிட் -19 நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் அதிகமான பாதிப்புகள் பதிவான நாளாக இது உள்ளது.

#TamilSchoolmychoice

“மார்ச் 3, இன்று மலேசியாவில் ஏழு புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆகையால், தற்போது 36 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 22 வழக்குகள் (61.1 விழுக்காடு ) குணப்படுத்தப்பட்டுள்ளன.”

“இன்னும் 14 பேர் சுங்கை புலோ மருத்துவமனை மற்றும் கோலாலம்பூர் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் அனைவரும் சீறாக உள்ளனர்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.