Home வணிகம்/தொழில் நுட்பம் 2014 ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு கைமாறுகிறது நோக்கியா!

2014 ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு கைமாறுகிறது நோக்கியா!

499
0
SHARE
Ad

Microsoft-Nokia செப்டம்பர் 3 – கைப்பேசி விற்பனையில் முதல் இடத்தில் இருந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை, அதன் பின் வந்த ஆப்பிள், சாம்சங் போன்ற திறன் கைப்பேசி(Smart phone) தயாரிப்பு நிறுவனங்கள் பின் தள்ளிவிட்ட நிலையில், அந்நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்க முன்வந்திருக்கிறது.

7.2 பில்லியன் டாலருக்கு நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்துக்குப் போட்டியாக, கடந்த 2011 ஆம் ஆண்டு நோக்கியா மைக்ரோசாப்ட்டின் விண்டோஸை பயன்படுத்தியது. ஆனால் அது பெரிய அளவில் விற்பனையைத் தரவில்லை.

#TamilSchoolmychoice

எனவே மைக்ரோசாப்ட்டுக்கு விற்கப்படும் இந்த பரிமாற்றம் வரும் 2014 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் ஸ்டீபன் எலோப் மீண்டும் மைக்ரோசாப்டிலேயே இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இவர் ஏற்கனவே மைக்ரோசாப்டில் இருந்து தான் நோக்கியாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.