கிள்ளான், பிப்.8- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00மணியளவில் கிள்ளான் செட்டி திடல் என்று அழைக்கக்கூடிய வணிகத்தளத்தில் நடைபெறும்.
காலை முதல் மாலை 6.30 மணியளவில் ‘தமிழ்மொழியை பாதுகாப்போம்’ எனும் பிரச்சாரம் தொடர்பில் தெங்கு கிளானா சாலைவீதியில் அமைதி ஊர்வலமும் நடைபெறும்.
தொடர்ந்து, இரவு 8.00 மணியளவில் பிரபல புகழ்பெற்ற பாடகரான இராஜ ராஜா சோழன் தலைமையில் இடம்பெறவுள்ள கலைநிகழ்ச்சியில் மக்கள் கூட்டணியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், டத்தோ அம்பிகா சீனிவாசன் உட்பட, கட்சி தலைவர்கள், சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதர பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்துக் கொள்வர்.
இந்நிகழ்வில் கலாச்சாரம் சார்ந்த போட்டிகளான கபடி, கோலப்போட்டி, சட்டி உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெறவுள்ளன.
இப்போட்டிகளில் பங்கு பெறும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் 50 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். இதனைத் தவிர்த்து தமிழ் மொழி மேம்பாட்டிற்கு சேவையாற்றி வந்துள்ள 10 சேவையாளர்கள் இந்நிகழ்வில் கெளரவிக்கப்படுவர்.
மேலும், இந்நிகழ்வில் சிலம்பக் கண்காட்சி விளையாட்டுகளும் இடம்பெறவுள்ளது.
எனவே, பொது மக்கள் அனைவரும் திரளாக வந்துக் கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.