Home நிகழ்வுகள் தமிழ் மொழியும் தமிழர் திருநாளும்!

தமிழ் மொழியும் தமிழர் திருநாளும்!

767
0
SHARE
Ad

tharmalingam-2தெமர்லோ, பிப்.8- தெமர்லோ மாவட்ட பொது இயக்கங்களின் ஏற்பாட்டில் ‘தமிழர் திருநாள்’ வரும் 10.2.2013 மாலை மணிக்கு, டேவான் ஸ்ரீ மெந்தகாப்பில் 1000 பேர் முன்னிலையில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழர்களின்  பண்பாட்டு நிகழ்வோடு நடனம், நாடகம், எழுச்சியுரையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நமது சமுதாயத்தினரிடம் மொழியின் மீது பற்றுதலை அதிகரிக்கும்  இன ஒற்றுமை உணர்வுச் சிந்தனையை ஏற்படுத்த எடுத்துக்காட்டும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“தமிழர்கள் தமிழர்களாக வாழ்கிறார்களா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கவுள்ளது. இதனை வழிநடத்த மலேசிய பேச்சாளர் மன்றத்திலிருந்து சு.நவராஜன், சு.சுரேந்திரன், சி.ம.இளந்தமிழ், இரா.சரவணன், இரா.செல்வஜோதி ஆகியோர் வருகையளிக்கின்றனர்.

அதற்கடுத்து, கண்களுக்கு விருந்தாக தலைநகரிலிருந்து இந்திராணி நடனப்பள்ளியும், அறிவிப்பாளராக குமாரி தமிழ்ச்செல்வியும் வருகின்றனர்.

இந்நிகழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மலேசிய சவை நற்பணி கழகத் தலைவர் திருமுறைச் செம்மல் ந.தர்மலிங்கம், தினக்குரல் நாளிதழ் தலைமையாசிரியர் ‘சுடும் உண்மைகள்’  பி.ஆர்.இராஜன், தமிழ்நெறிக்கழகத் தலைவர் திரு மாவளவன் ஆகியோர் வருகைதரவிருக்கின்றனர்.

இலவசமாக நடைப்பெறும் இந்நிகழ்வில் தமிழ் ஆர்வாலர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறும் மேலும் இந்நிகழ்வை சிறப்பாக நடத்த துணைபுரியும் அனைத்து இயக்கங்களும் ஏற்பாட்டுக் குழு தலைவர் புருஷோத்தம் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.

மேல் விவரங்களுக்கு, ஏற்பாட்டுக் குழு தலைவர் நா.புருஷோத்தமன் (019-9554731), மற்றும் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சி.குப்பிசாமி (012-9883637)