சென்னை, செப். 5– தத்துவமேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
விழாவில் 370 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. விருதினை பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் வழங்குகிறார். தொடக்க கல்வி துறையில் 196 ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வி துறையில் 134 பேருக்கும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 25 பேருக்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் 10 பேருக்கும் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 2 பேருக்கும் சமூக நலத்துறை பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
முடிவில் தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் நன்றி கூறுகிறார்.