Home நாடு பாஹாசா மலேசியா பாடத்திட்டம்: முகைதீன் கூறுவது உண்மையில்லை – சீன சங்கங்கள் கண்டனம்

பாஹாசா மலேசியா பாடத்திட்டம்: முகைதீன் கூறுவது உண்மையில்லை – சீன சங்கங்கள் கண்டனம்

622
0
SHARE
Ad

muhidinகோலாலம்பூர், செப்டம்பர் 7 – பாஹாசா மலேசியா பாடத்திற்கு தாய் மொழிப் பள்ளிகள் கூடுதல் நேரம் ஒதுக்க ஒப்புக்கொண்டிருப்பதாக கல்வி அமைச்சரும், துணைப் பிரதமருமான முகைதீன் யாசின் அறிவித்ததை மூன்று சீன சங்கங்கள் மறுத்துள்ளன.

பஹாசா மலேசியா பாடம் கற்பிக்கப்படும் நேரத்தை 180 நிமிடங்களிலிருந்து 240 நிமிடங்களாகக் கூட்டுவதற்குத் தாங்கள்  ஒப்புக்கொண்டதாக முகைதீன் கூறுவது உண்மையல்ல என்று அந்த மூன்று சங்கங்களான ஜியாவ் ஜோங், ஹுவா ஜோங், பள்ளித் தலைமையாசிரியர் தேசிய சங்கம் கூறுகின்றன.

நேற்று அந்த 3 சங்கங்களின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், துணைப்பிரதமரின் அறிக்கையைக் கண்டு தாங்கள் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாகவும், இது உண்மையல்ல என்றும் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சங்கங்களின் பிரதிநிதிகள் முகைதீனை சந்தித்த போது, 730 சீனத் தொடக்கநிலைப் பள்ளிகள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்று அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பஹாசா மலேசியா பாடத்துக்கு 240 நிமிடங்கள் தேவை என்று பிரதமர் பரிந்துரைத்துள்ளார். ஆனால் அவரின் பரிந்துரையை தாங்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக அந்த 3 சீன சங்கங்கள் கூறுகின்றன.

இவ்விவகாரம் தொடர்பில் தொடர்ந்து போராடப் போவதாகவும் அவை தெரிவித்தன.

தாய்மொழிப் பள்ளிகள் தேசிய கல்வி செயல்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதுடன் பஹாசா மலேசியா பாடத்தை கற்பிக்கக் கூடுதல் நேரத்தை  ஒதுக்கவும் ஒப்புக்கொண்டுள்ளன எனக் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் நேற்று திடீர் அறிவிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.