Home நாடு ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!

ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!

891
0
SHARE
Ad

GANG LEADERS NAMESகோலாலம்பூர், செப்டம்பர் 7 – நாடு முழுவதும் ஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டதின் விளைவாக காவல்துறை நேற்று 122, 255 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து அதில் 4,806 பேரை கைது செய்துள்ளது.

இந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில், 221 ஆயுதங்கள் மற்றும் நாட்டு துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

“நாங்கள் 10 துப்பாக்கிகள், 3 போலி துப்பாக்கிகள், 10 சுடும் ஆயுதங்கள், 11 தோட்டாக்கள், 21 வாள்கள், 68 கத்திகள், 45 வீச்சரிவாள்கள், 6 கோடாரிகள், 12 இரும்பு கம்பிகள், 4 மரக் கட்டைகள் ஆகியற்றைக் கைப்பற்றியுள்ளோம். குண்டர் கும்பலைச் சேர்ந்த பலர் கையில் ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்” என்று புக்கிட் அமான் காவல்துறைத் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு மற்றும் சூது பிரிவு 7 ( Division 7) ன் துணை ஆணையரான டத்தோ அப்துல் ஜாலில் ஹஸ்ஸான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், 75,575 வாகனங்களை சோதனை செய்த போது அதில் 222 வாகனங்கள் திருடப்பட்ட வாகனங்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அப்துல் ஜாலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடுமையான நடவடிக்கைகளின் விளைவால் குண்டர்கள் கும்பல்கள் தங்களது எல்லைகளைப் பிரித்துக்கொள்வதில் தகராறு ஏற்பட்டு ஆங்காங்கே சில குண்டர் கும்பல் தலைவர்கள் கொல்லப்படுவதாகவும் அப்துல் ஜாலில் கூறியுள்ளார்.

தற்போது காவல்துறை நாடுமுழுவதும் உள்ள 30 குண்டர்கள் கும்பலைச் சேர்ந்த தலைவர்களின் பெயரை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.