Home நாடு ஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கை தீவிரம் – இதுவரை 1,911 பேர் கைது!

ஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கை தீவிரம் – இதுவரை 1,911 பேர் கைது!

687
0
SHARE
Ad

imageகோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – ஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கையின் கீழ் புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்பு மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை, கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், இதுவரை 1,911 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து இந்நடவடிக்கைக் குழுவின் இயக்குநர் நூர் ரஷீட் இப்ராஹிம் கூறுகையில், இதுவரை மொத்தம் 1772 விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 29 விசாரணைகள் போதைப்பொருள் சட்டம் 39 பிரிவின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், 10,410.41 கிராம் ஹெரோயினையும், 6,793.35 கிராம் ஷாபுவையும், 778.91 கிராம் கஞ்சாவையும், 1,097 எர்மின் 5 மாத்திரைகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

#TamilSchoolmychoice

அத்துடன் கேங் 04, கேங் 08, கேங் 555, கேங் ராஜ், கேங் 18 ஆகிய குண்டர் கும்பலைச் சேர்ந்த 30 பேரை காவல்துறை கைது செய்துள்ளது என்று நூர் ரஷீட் கூறியுள்ளார்.