செப். 7- குறும்பட இயக்குனரான பாலாஜி மோகன் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானார்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்து இயக்கப்போகும் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியது.
இந்நிலையில், இவர் அடுத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகனுமான துல்கர் சல்மானை தமிழில் அறிமுகப்படுத்த உள்ளார். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார்.
துல்கர் சல்மான் தமிழில் முதன்முதலாக நடிக்க இருக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க நஸ்ரியா நசீம் ஒப்பந்தமாகி உள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்திற்கு பெயர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் தற்போது ‘சலால மொபைல்ஸ்’ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.