Home வணிகம்/தொழில் நுட்பம் சரியும் ரூபாய் மதிப்பால், இந்திய சந்தையில் ஐ-போன் செல்பேசிகளின் விலையைக் கட்டுப்படுத்த ஆப்பிள் நிறுவனம் முயற்சி!

சரியும் ரூபாய் மதிப்பால், இந்திய சந்தையில் ஐ-போன் செல்பேசிகளின் விலையைக் கட்டுப்படுத்த ஆப்பிள் நிறுவனம் முயற்சி!

564
0
SHARE
Ad

iPhone-Featureசெப்டம்பர் 10 – எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்குள் உலகின் இரண்டாவது மிகப் பெரிய திறன்பேசிகளின் சந்தையாக, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா விளங்கும் என்பது வர்த்தக ஆய்வாளர்களின் கணிப்பாகும்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு உலக சந்தையில் குறைந்து கொண்டே வருவதால், அதனால், ஐ-போன் செல்பேசிகளின் விலையைக் கட்டுப்படுத்தி வைக்க அதன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தனது வர்த்தக வியூகத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் விற்கப்படும் ஐ-போன் செல்பேசிகளின் விலைகளில் தனக்குக் கிடைக்கும் பங்கில் 14 சதவீதத்தை குறைத்துக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம், ஐ-போன்களின் விலைகள் 2012ஆம் ஆண்டில் அது விற்கப்பட்ட அதே விலையிலேயே இந்தியாவில் இருந்து வரும். 2012ஆம் ஆண்டில் ஐபோன் விற்பனையால் தங்களுக்குக் கிடைத்த இலாபத்தில் 14 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம் இதனால் குறைத்துக் கொள்ளவிருக்கின்றது.

உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் திறன்பேசிகளின் சந்தையாக விளங்கும் இந்தியாவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் சந்தையைப் பயன்படுத்திக் கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிடுகின்றது.

கொரியாவின் சாம்சுங் நிறுவனம் போன்று ரூபாய் மதிப்பு குறைவால், விலைகளை உயர்த்த ஆப்பிள் நிறுவனம் விரும்பவில்லை.

இருப்பினும், இந்தியாவில் ஐ-போன் குறித்த விலையைப் பற்றிய கருத்துக்களை ஆப்பிள் நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இந்தியாவின் திறன்பேசி சந்தையில் ஆப்பிள் நிறுவனம் தற்போது ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், இந்த முக்கிய சந்தையில் தனக்குரிய இடத்தை மேலும் வலுவுடன் வேரூன்றச் செய்யும் நோக்கில், தனக்குக் கிடைக்கும் இலாபத்தை ஆப்பிள் நிறுவனம் குறைத்துக் கொண்டுள்ளது. குறுகிய கால இலாபத்தைக் கருத்தில் கொண்டும் இந்தியா போன்ற முக்கியமான நாட்டின் சந்தையைப் பெருக்கும் நோக்கிலும் ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இன்று புதிதாக ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஐபோன் ரகங்களில், விலை குறைந்த பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட மலிவு விலை ரகங்களும் இருக்கும் என்பதால், இந்த புதிய ரகங்களும் இந்த முறை சீனா, இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.