Home உலகம் ரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் சிரியா மீதான தாக்குதலை நிறுத்த முடியும்: ஒபாமா

ரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் சிரியா மீதான தாக்குதலை நிறுத்த முடியும்: ஒபாமா

480
0
SHARE
Ad

வாஷிங்டன், செப் 10- சிரியாவில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக அதிபர் ஆசாத்துக்கு எதிராக நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கு சென்றுள்ளனர். 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்நாட்டிலேயே அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

obama-angry-3இந்நிலையில், கடந்த மாதம் நடந்த தாக்குதலில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஐ.நா. கூறியது. இதையடுத்து அமெரிக்காவும் சிரியா சரின் விஷக்குண்டுகளை வீசி பொதுமக்கள் 1429 பேரை கொன்றது என்று குற்றம் சாட்டி அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.

#TamilSchoolmychoice

இத்தாக்குதலுக்காக உள்நாடு மற்றும் உலக நாடுகளின் ஆதரவை பெறும் முயற்சியை அதிபர் ஒபாமா மேற்கொண்டுள்ளார். ஆனால், இதற்கு உள்நாட்டில் எதிர்கட்சி தரப்பிலும், உலகில் ரஷ்யா மற்றும் சீனா தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிரியா ரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து ஒபாமா கூறியதாவது:-

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா நாட்டை ஐயத்துடனும் அதே நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனித்து வருகிறோம். சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை பன்னாட்டு சமூகத்திடம் ஒப்படைக்க சிரியா அரசை வலியுறுத்துவோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. இது குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றம்.

இதற்கு சிரியா அதிபர் உறுதியளிப்பாரேயானால், அந்நாட்டின் மீதான தாக்குதல் திட்டம் முழுமையாக நிறுத்திவைக்கப்படும். இந்த முடிவு எனது தேசிய நலனை பொறுத்தே அமையும். சண்டையில்லாமலே இந்த பிரச்சினை முடியும் என்று நான் நினைக்கிறேன். அமெரிக்க மக்களிடம் நேரிடையாக பேசியபிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சிரியா மீது போர் தொடுக்க செனட் சபையின் 50 உறுப்பினர்கள் வாக்களிக்கவேண்டும். ஆனால் ஒபாமாவின் இந்த முடிவிற்கான ஆதரவு பெரும்பாலும் கிடைக்காது என்றே சொல்லப்படுகிறது.