Home 13வது பொதுத் தேர்தல் 13வது பொதுத் தேர்தலுக்கு இடையூறு செய்ய வேண்டாம் – அம்பிகாவுக்கு எச்சரிக்கை!

13வது பொதுத் தேர்தலுக்கு இடையூறு செய்ய வேண்டாம் – அம்பிகாவுக்கு எச்சரிக்கை!

624
0
SHARE
Ad

ambiga-bersihபிப்.8- 13வது பொதுத் தேர்தலுக்கு சுமூகமாக நடைபெறும் பொருட்டு அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் (இசி) பெர்சே 2.0ன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனை கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, வெளிநாட்டு மலேசிய வாக்காளர்கள் தொடர்பான அம்பிகா அறிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த நாட்டின் ஜனநாயக நடைமுறைகள் மீதான பொது மக்களுடைய நம்பிக்கையை பாதித்துள்ளதாகவும் இசி  துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் வனமயாகச் சாடினார்.

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் மலேசியர்களுக்கான அஞ்சல் வாக்குகள் தொடர்பில் அம்பிகா விடுத்த அறிக்கையை சாடிய வான் அகமட், தாயகம் திரும்புவதற்கு போதிய நேரமும் நிதியும் இல்லாதவர்களுக்கு அஞ்சல் வழி வாக்களிப்பதற்கு இசி உண்மையில் வாய்ப்பு அளிப்பதாக விவரமாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

“அம்பிகா குழப்பத்தைத் தரும் விதமாக அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையானது இசி-க்கு உதவுவதாக இல்லை. மாறாக அதன் மீதான நம்பிக்கையை மேலும் சிதறடிக்கின்றது. பொது தேர்தலுக்கு அஞ்சல் வாக்குகள் மூலமாக வாக்களிக்கலாம் அல்லது வாக்களிக்க நேரடியாக தாயகம் திரும்பலாம்.”

“இசி-யின் நடைமுறைகளையும் வெளியுறவு அமைச்சுடனும் எல்லாத் தூதரகங்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்ட நடைமுறைகளையும் அம்பிகா புரிந்து கொள்ளவில்லை என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன.

அவரது அறிக்கை ஊகங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உண்மையில்லாத விஷயங்கள் மூலம் மக்கள் மனதில் நஞ்சைக் கலக்கும் நோக்கத்தைக் கொண்டது,” என்றும் வான் அகமட் சொன்னார்.