Home இந்தியா ஜெயலலிதா சார்பில் கருணாநிதி மீது அவதூறு வழக்கு

ஜெயலலிதா சார்பில் கருணாநிதி மீது அவதூறு வழக்கு

738
0
SHARE
Ad

images

சென்னை, பிப். 8- கடந்த 31-ந்தேதி முரசொலி நாளிதழில் தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி இருந்தது. பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்ற தலைப்பில் வெளியான அந்த கடிதத்தில் விஸ்வரூபம் படம் சம்பந்தப்பட்ட அரசின் நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

இது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி அவரது சார்பில் சென்னை நகர முதன்மை அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு  வழக்கு தாக்கல் செய்தார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.