Home உலகம் ஜப்பான் தீவு பகுதியில் நுழைந்த ரஷ்ய விமானங்கள் விரட்டியடிப்பு

ஜப்பான் தீவு பகுதியில் நுழைந்த ரஷ்ய விமானங்கள் விரட்டியடிப்பு

720
0
SHARE
Ad

Japan-map-Slider

டோக்கியோ,பிப்.7- ரஷ்ய போர் விமானங்கள், ஜப்பானுக்கு சொந்தமான தீவு பகுதியில் அத்துமீறி நுழைந்தன. இவற்றை ஜப்பான் போர் விமானங்கள் விரட்டியடித்தன. கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக இதுபோன்ற அத்துமீறல் நடந்துள்ளது. ஜப்பானுக்கு சொந்தமான தீவு ஹொக்கைடோ. இதன் சொந்தக்காரர் தங்களுக்கு விற்றுவிட்டதால், அது தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறி வருகிறது.

இதேபோல், ரஷ்யா உள்ளிட்ட வேறு சில நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. ஆனால், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, இந்த தீவை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உறுதி கூறி வருகிறார். அவர் டிசம்பர் மாதம் பிரதமர் பதவியை ஏற்றார். அப்போது, தீவை பாதுகாக்க ஜப்பான் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று சூளுரைத்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஹொக்கைடோ தீவு பிரச்னையில், பரஸ்பரம் ஏற்று கொள்ளக்கூடிய வகையிலான சமரசத்துக்கு தாங்கள் தயாராக உள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்று அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், ரஷ்யாவின் சூ,27 ரக போர் விமானங்கள் இரண்டு, ஹொக்கைடோ தீவின் வடபகுதியில் சில நிமிடங்கள் பறந்தன.

இதை ரேடாரில் பார்த்த ஜப்பான் விமானப்படை உடனடியாக போர் விமானங்களை அப்பகுதிக்கு அனுப்பி, ரஷ்ய போர் விமானங்களை விரட்டியடித்தது. கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற அத்துமீறலில் ரஷ்ய விமானங்கள் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்று ஜப்பானிய செய்தி நிறுனங்கள் கூறியுள்ளன.