Home வணிகம்/தொழில் நுட்பம் சீமா – நீலாய் பல்கலைக்கழகங்களிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சீமா – நீலாய் பல்கலைக்கழகங்களிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

773
0
SHARE
Ad

index

நீலாய்,பிப்.7- கணக்கியல் துறையில் பட்டப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவன அமைப்பான  “சீமா”வுடன் (CIMA)  நீலாய் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளது.

கணக்கியல் துறையில் பட்டப் படிப்பை  கற்கும் மாணவர்கர்  சிறந்த வேலை வாய்ப்புகள்  பெற முடியும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததின் வழி  நிதி நிர்வாகத்துறை, கணக்கியல் துறையில் கல்வி கற்கும் மாணவர்கள் சீமா தொழில் துறை தேர்வுகளில் இருந்து எட்டு பாடங்களில் விதி விலக்கு பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

நீலாய் பல்கலைக்கழகம் பட்டப்படிப்புக்குப்  பின்னர் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதில் ஆர்வம்  கொண்டிருப்பதால் தாங்கள் அப்பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்திருப்பதாக சீமா நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியாவின் மண்டல இயக்குநர் ஐரின் தெங் தெரிவித்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததில் நீலாய் பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் மெகாட் புர்ஹாடினும், சீமா தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியாவின் மண்டல இயக்குநர் ஐரின் தெங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.