வாஷிங்டன், செப் 12- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய அமெரிக்கரான புனீத் தல்வாரை நாட்டின் மிக முக்கிய தூதரக பதவிக்காக பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்க அரசுத்துறையின் மிக உயரிய பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டாவது நபராக புனீத் தல்வார் விளங்குகிறார்.
கடந்த ஜூலை மாதம் நிஷா தேசாய் பிஸ்வால் என்பவர் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளியுறவு உதவி செயலாளராக பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரு பதவிகளும் செனட் சபையால் உறுதி செய்யப்படவுள்ளது.
மேலும் வரும் வருடங்களில் அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.