Home 13வது பொதுத் தேர்தல் ‘சுத்தமற்ற’ பெர்சே நடத்தும் நிகழ்வில் நான் பங்கேற்கப்போவதில்லை – தெங்கு அட்னான்

‘சுத்தமற்ற’ பெர்சே நடத்தும் நிகழ்வில் நான் பங்கேற்கப்போவதில்லை – தெங்கு அட்னான்

737
0
SHARE
Ad

tengkuகோலாலம்பூர், செப் 19 – 13 வது பொதுத்தேர்தல் தொடர்பாக பெர்சே இயக்கம் ஏற்பாடு செய்திருக்கும் ‘மக்கள் நடுவர் மன்றம்’ என்ற நிகழ்வில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை. காரணம்  ‘பெர்சே’ வில் சுத்தமில்லை என்று தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரான தெங்கு அட்னான் தெங்கு மன்ஸோர் கூறியுள்ளார்.

மே 5 பொதுத்தேர்தலில் புத்ரஜெயா நாடாளுமன்ற தொகுதியில் வெளிநாட்டினர்களை பெர்சே வாக்களிக்க வைத்தது என்றும் தெங்கு அட்னான் குற்றம் சாட்டியுள்ளார்.

“பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்களை வாடகைக் காரில் வாக்காளர்கள் போல் அழைத்து வந்தார்கள். யார் இதெல்லாம் செய்தது? பெர்சே மக்கள் தான்” என்று இன்று காலை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெங்கு அட்னான் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

தன்னை இந்நிகழ்வில் தேசிய முன்னணி சார்பாக பிரதிநிதிக்குமாறு பெர்சே அனுப்பிய இரு கடிதங்களுக்கு இது தான் தன்னுடைய பதில் என்றும் தெங்கு அட்னான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்தால் இந்நிகழ்வில் பங்கேற்கிறேன் என்று தெங்கு அட்னான் கூறியதாக பெர்சே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.