Home வணிகம்/தொழில் நுட்பம் புதுரக ஐ-போன்கள் இன்று முதல் உலகமெங்கும் விற்பனை!

புதுரக ஐ-போன்கள் இன்று முதல் உலகமெங்கும் விற்பனை!

535
0
SHARE
Ad

iphone-2013செப்டம்பர் 20 – பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய ரக ஐ-போன்கள் இன்று முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உலக நாடுகளில் விற்பனைக்கு வருகின்றன.

#TamilSchoolmychoice

சிங்கப்பூரிலும் இன்று முதல் புதிய ரக ஐ-போன்கள் விற்பனைக்கு வருகின்றன. மலேசியாவில் இவை அறிமுகப்படுத்தப்படும் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த வார இறுதிக்குள், உலகம் முழுமையிலுமாக 5 முதல் 6 மில்லியன் ஐபோன்கள் வரை விற்றுத் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவிலும் இந்த முறை ஏக காலத்தில் ஐபோன்கள் விற்பனைக்கு வருவதால், மேலும் அதிகமான எண்ணிக்கையில் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டு, ஓர் உலக சாதனை நிகழலாம் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு, 5S ரக ஐபோன்கள் விற்பனைக்கு வந்தபோது, அறிமுகப்படுத்தப்பட்ட வார இறுதியில் மட்டும் 5 மில்லியன் ஐபோன்கள் விற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பல நாடுகளில் மக்கள் ஆர்வமுடன் நேற்று இரவு முதற்கொண்டே ஆப்பிள் நிறுவனக் கடைகளில் வரிசை பிடித்து நிற்கத் தொடங்கியுள்ளனர்.