“சீன இனத்தவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தனியார் நிறுவனங்களின் பங்கெடுப்பை அரசாங்கம் தனது கொள்கைகளின் மூலம் வலுப்படுத்துகிறது” என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில குத்தகைகளில் பூமிபுத்ராக்களின் நிறுவனங்கள் முழுவதுமாக எல்லா பொறுப்புகளையும் எடுத்துக்கொள்ள முடியாது. எனவே அந்த பொறுப்புகள் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் சீன சமுதாயம் பயனடைகிறது என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.
“எனவே பூமிபுத்ராக்களின் பொருளாதார உயர்வு மற்ற இனங்களுக்கு பயனளிக்காது என்று கூறமுடியாது” என்றும் நஜிப் கூறியுள்ளார்.