Home கலை உலகம் மணிசர்மா இசையில் சுமார் 500 பாடல்கள் எழுதியுள்ள யுகபாரதி

மணிசர்மா இசையில் சுமார் 500 பாடல்கள் எழுதியுள்ள யுகபாரதி

508
0
SHARE
Ad

செப். 21- ‘ஆப்பிள் பெண்ணே’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இப்படத்திற்கு மணிஷர்மா இசையமைக்கிறார். இப்படத்தில் தேசிய விருது வாங்கிய தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

485cd8d6-6ece-4a8a-a02e-55c9a3d023caOtherImageஇவ்விழாவில் தம்பி ராமையா பேசுகையில், ”மணிஷர்மா இசையில் மட்டும் யுகபாரதி சுமார் 500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார் என்ற செய்தியை வெளியிட்டார்”.

#TamilSchoolmychoice

பின்னர் யுகபாரதி பேசும்போது, ”நான் ஒரு படத்திற்கு சுலபமாக பாடல்கள் எழுதி விடுவேன். ஆனால் அந்த படத்தில் தம்பி ராமையா நடிக்கிறார் என்றால் மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுதுவேன். பாடலில் சிறு பிழைகள் இருந்தாலும் அதை சரியாக கவனித்து எனக்கு அழைத்து தெரிவித்து விடுவார்.

என்ன தம்பி, இப்படி எழுதியிருக்கீங்க என்று கேட்பாரோ என்று பயந்தே பாட்டு எழுதுவேன். இப்போது  அழைத்து பேசும்பொழுது, தம்பி அமர்க்களமாக எழுதியிருக்கீங்க என்றுதான் பேசவே ஆரம்பிக்கிறார். அதுதான் எனக்கு சந்தோஷம்.

இந்த படத்தில் முதலில் ஒரு பாடலை எழுதுவதற்குத்தான் என்னை இயக்குனர் அழைத்தார். பின் எல்லா பாடல்களையும் நானே எழுதும்படி மாற்றியதே அந்த ஒரு பாடல்தான் என்றார்”.