செப். 21- ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் அனீஷ் இயக்கும் படம் ‘திருமணம் என்னும் நிக்கா’ என கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளிவந்தது.
இதில் ஜெய் கதாநாயகனாகவும், சமந்தா கதாநாயகியாகவும் நடிக்க இருப்பதாவும் செய்திகள் வந்தன. அதன்பிறகு சமந்தாவுக்கு நேரம் இல்லாததனால் ‘நஸ்ரியா நசீம்’ ஜெய் உடன் ஜோடி சேர்ந்தார்.
நஸ்ரியா நசீம் அதன்பின் ‘நேரம்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ ஆகிய படத்தில் நடித்துள்ளார்.
நஸ்ரியா நசீம் தற்போத முன்னணி நடிகையாக மாறி வருகிறார். அதேபோல் ஜெய்யும் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ‘திருமணம் என்னும் நிக்கா’ படத்தில் ஜெய்யும், நஸ்ரியாவும் ஜோடி சேர்ந்து நடிக்கும்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது ‘திருமணம் என்னும் நிக்கா’ படத்தின் செய்தியும் வெளியாகியுள்ளன. இப்படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்க வேண்டியுள்ளது.
ஆடுத்த மாதத்தில் இசை வெளியீட்டு விழா நடத்த இருப்பதாகவும், அதனைத்தொடர்ந்து படத்தை நவம்பருக்குள் வெளியிடவும் திட்டமிட்டுருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை. இப்படம் நகைச்சுவை மற்றும் காதல் கலந்த கதையாக உருவாகியிருக்கிறது.