Home உலகம் 34 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, ஈரான் அதிபர்கள் சந்திக்கிறார்கள்: நல்லுறவு மீண்டும் ஏற்படுமா?

34 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, ஈரான் அதிபர்கள் சந்திக்கிறார்கள்: நல்லுறவு மீண்டும் ஏற்படுமா?

573
0
SHARE
Ad

வாஷிங்டன், செப்.21- அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஈரான் அதிபர் ஹசன் ரப்பானி ஆகியோர் நியூயார்க்கில் சந்தித்து பேச இருக்கிறார்கள்.

இரு நாட்டு அதிபர்களும் 34 ஆண்டுக்கு பிறகு முதல் தடவையாக சந்திப்பதால் நல்லுறவு மீண்டும் மலர வாய்ப்பு உருவாகும் என கருதப்படுகிறது.

ஈரான் ரகசிய அணு உலை மூலம் ஆயுதம் தயாரிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

#TamilSchoolmychoice

இதை மின்சார உற்பத்தி திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்துவதாக ஈரான் கூறியது.

ஆனால் அதை ஏற்க அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் மறுக்கின்றன. இதனால் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு அமலில் இருக்கிறது. அங்கிருந்து கச்சா எண்ணெய் வாங்கவும் சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

hubungan-amerika-dan-iran-ilustrasi-_121108181421-517ஈரான் நாட்டின் புதிய அதிபர் ஹசன் ரப்பானி பதவி ஏற்ற பிறகு அந்நாட்டின் நிலைப்பாட்டில் சற்று மாற்றம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் ரப்பானி தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், ‘எனது ஆட்சி காலத்தில் அணு ஆயுதங்கள் தயாரிக்க மாட்டோம். எந்த சூழ்நிலையிலும் அதற்கு அனுமதிக்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டார்.

அத்துடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்த விரும்புகிறேன் என்றும், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்’ என்றும் குறிப்பிட்டார். இந்த ரப்பானியின் அறிவிப்பை அமெரிக்கா வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி மற்றும் பிரான்சு நாட்டு தலைவர்கள் வரவேற்றனர்.

usa-obama-economyஇந்நிலையில் ஐ.நா.வின் 68-வது பொதுச்சபை கூட்டம் அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஈரான் அதிபர் ஹசன் ரப்பானி செல்கிறார். அப்போது அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜாய் கார்னே பதில் அளிக்கையில், ‘தற்போதைய திட்டத்தின்படி ஒபாமாவும், ஈரான் அதிபரும் சந்திக்கும் அம்சம் இடம்பெறவில்லை. என்றாலும் சந்திப்பு நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது’ என்றார். ஆகவே இரு தலைவர்களும் கண்டிப்பாக சந்திப்பார்கள் என்று கருதப்படுகிறது.

ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு புரட்சி ஏற்பட்டு ஷா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன்பிறகு அமெரிக்கா, ஈரான் இடையே தூதரக உறவுகள் துண்டிக்கப்பட்டது. இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசியதில்லை. தற்போது கிட்டத்தட்ட 34 ஆண்டுக்கு பிறகு முதல் தடவையாக சந்திக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் மூலம் நல்லுறவு மீண்டும் புதுப்பிக்கப்பட வாய்ப்பு மலர்ந்திருப்பதாக கருதப்படுகிறது. இதேபோன்று ரப்பானியை சந்திக்க போவதாக பிரான்சு ஜனாதிபதி பிரான்கோசிஸ் ஹோலண்டேவும் விருப்பம் தெரிவித்தார். இவர்களும் நியூயார்கில் சந்தித்து பேசுவார்கள்.

இதுவும் 2005-ம் ஆண்டுக்கு பிறகு 2 நாட்டு தலைவர்கள் சந்திப்பது முதல் தடவையாகும். இதற்கிடையில் சிரியா ரசாயன ஆயுதம் குறித்த விவாதம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் அடுத்த வாரம் விவாதிக்கப்படும் என அமெரிக்க மந்திரி ஜான் கெர்ரி தெரிவித்தார். அதற்கான மாதிரி தீர்மானம் தயாராகி விட்டது. அதன் ஒரு பகுதி ரஷியாவுக்கு மகிழ்ச்சி தரவில்லை.