Home கலை உலகம் பாலிவுட் கனவுக்கன்னி டிம்பிள் கபாடியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வருகிறார்

பாலிவுட் கனவுக்கன்னி டிம்பிள் கபாடியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வருகிறார்

862
0
SHARE
Ad

செப். 23- பாலிவுட்டில் கனவு கன்னியாக திகழ்ந்தவர் டிம்பிள் கபாடியா.

இவர், ‘பாபி’ என்ற திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது அவருக்கு கிடைத்தது.

7330814_galஅதன்பின் அவர் நடித்த ‘சாகர்’ என்ற திரைப்படமும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்று தந்தது.

#TamilSchoolmychoice

அந்த படத்தை தொடர்ந்து தமிழில், கமலஹாசன் ஜோடியாக ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். டிம்பிள் கபாடியாவின் முதல் படம் வெளிவருவதற்கு முன்பே நடிகர் ராஜேஷ் கண்ணாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

Dimple_Kapadiaதிருமணமான பின்னர் குழந்தைகளை வளர்ப்பதற்காக நடிப்பதை நிறுத்தி கொண்டார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது, ‘வாட் தி பிஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உத்தர பிரதேசத்தில் வசிக்கும் வயதான பெண்ணாக டிம்பிள் கபாடியா நடிக்கிறார்.

இந்த படம் குறித்து இயக்குநர் குர்மீத் சிங் கூறும்போது, இந்த படத்தில் கபாடியாவின் கதாபாத்திரம் அழுத்தமானது. இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஒரே நடிகை கபாடியா மட்டுமே. படத்தின் இறுதி கட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்த படத்தில் அவருடன் பணியாற்றும்போது எனக்கு கடினமாக தோன்றவில்லை.

18MP_DIMPLE_219050fகபாடியாவிற்கு படத்தின் திரைக்கதையை அனுப்பினேன். அதனை படித்து விட்டு படத்தில் நடிக்க ஆர்வமானார். அவர் மிக பணிவானவர். அவருடன் பழகுவதில் பெரிதாக எந்த பிரச்சினையும் இல்லை. படம் முழுவதும் நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் ஒரு சாதனையாளர். அவருடன் படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட தருணங்கள் நினைவில் கொள்ள கூடியது என்றும் கூறியுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.