Home வணிகம்/தொழில் நுட்பம் வார இறுதிக்குள் 9 மில்லியன் ஐ-போன்கள் விற்று சாதனை! 200 மில்லியன் ஆப்பிள் கருவிகளில் ஐஓஎஸ்...

வார இறுதிக்குள் 9 மில்லியன் ஐ-போன்கள் விற்று சாதனை! 200 மில்லியன் ஆப்பிள் கருவிகளில் ஐஓஎஸ் 7 பதிவிறக்கம்!

649
0
SHARE
Ad

ios6-vs-ios7செப்டம்பர் 23 – அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றே நாட்களில், ஒரே வார இறுதிக்குள் உலகம் முழுமையிலும்9 மில்லியன் ஐ-போன்களை விற்று ஆப்பிள் நிறுவனம் சாதனை புரிந்துள்ளது.

#TamilSchoolmychoice

5c மற்றும் 5s என இரு ரக ஐ-போன்களும் சேர்ந்து 9 மில்லியன் எண்ணிக்கையில் விற்பனை சாதனை புரிந்துள்ளது. கடந்த ஆண்டு 5s ரக ஐ-போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது 5 மில்லியன் ஐ-போன்கள் விற்றன. அந்த சாதனை இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மகத்தான சாதனைக்கு முக்கிய காரணம் இந்த புதிய ரக ஐ-போன்கள் சீனாவிலும் ஏக காலத்தில் விற்கப்பட்டதுதான். கடந்த ஆண்டு 5s ரக ஐ-போன்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அவை 2 மில்லியனுக்கும் மேல் விற்பனையாயின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் ஏறத்தாழ அதே எண்ணிக்கையில் அல்லது அதைவிடக் கூடுதலாக சீனாவில் ஐ-போன்கள் விற்றிருக்கும் என கருதப்படுகின்றது.

இனி அடுத்த கட்ட 5s ஐ-போன்களின் விற்பனை அக்டோபரில்தான் சாத்தியம் என அறிவிக்கப்பட்ட வேளையில், மற்றொரு ரகமான 5c ஐ-போன்கள் இன்னும் கையிருப்பில் இருப்பதாகவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதிலிருந்து உயர்ந்த ரகத்தில் தயாரிக்கப்பட்ட 5s ஐ-போன்களுக்குத்தான் அதிகமான கிராக்கி ஏற்பட்டுள்ளது எனத் தெரிகின்றது.

புதிய ரக ஐ-போன்களின் விற்பனை சாதனை ஒருபுறம் இருக்க, புதிய இயங்குதளமான ஐஓஎஸ் 7 இலவசமாக வழங்கப்பட்டதில் பழைய ஐ-போன் மற்றும் ஐ-பேட் போன்ற கருவிகள் வைத்திருப்பவர்கள் இதுவரை 200 மில்லியன் எண்ணிக்கையில் ஐஓஎஸ் 7 இயங்குதளத்தை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இதுவும் சில நாட்களிலேயே நிகழ்ந்து முடிந்திருப்பதால், சரித்திரத்திலேயே இதுதான் மிக துரிதமான காலகட்டத்திற்குள் அதிக அளவில் பதிவிறக்கம் செய்ப்பட்ட மென்பொருள் என்ற சாதனையையும் ஐஓஎஸ் 7 இயங்குதளம் சாதித்திருக்கின்றது.

இசை சார்ந்த சேவைகளை வழங்கும் ஐ-டியூன்ஸ் ரேடியோவின் இயங்குதளத்தை மட்டும் இதுவரை 11 மில்லியன் வாசகர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த சேவை அமெரிக்காவில் மட்டும்தான் கிடைக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.