Home நாடு பாகாங் தேசிய சேவை பயிற்சி மையத்தில் வாலிபர் மர்ம மரணம்!

பாகாங் தேசிய சேவை பயிற்சி மையத்தில் வாலிபர் மர்ம மரணம்!

451
0
SHARE
Ad

NSபாகாங், செப் 25 – பாகாங்கிலுள்ள உள்ள பிளாங்கி மையத்தில், தேசிய சேவை பயிற்சிக்காக வந்த தெமெர்லோவைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

முகமட் சுஹைமி நோர்ஹமீடி என்ற அந்த வாலிபர் மழுங்கடிக்கப்பட்ட ஆயதத்தால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

நள்ளிரவில் அவரது நண்பர்கள் காணும் போது குளியலறையில் அவர் சுயநினைவின்றி கிடந்தார் என்றும், அவரது காது பகுதியில் காயங்கள் இருந்ததாகவும் பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

இது குறித்து ஜோஹாரி ஜெயா துணைக்கண்காணிப்பாளர் ரொம்பின் கூறுகையில், “அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

சுஹைமி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், இறப்பதற்கு முன்னதாக சக பயிற்சியாளர்களுடன் அவர் உடற்பயிற்சிகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை சுஹைமிக்கும், அங்கு பயிற்சியில் உள்ள சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.