கோலாலம்பூர், செப் 25 – இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், தடுப்புக்காவல் மரணம் குறித்து கேள்வி கேட்ட பிகேஆர் உதவித்தலைவர் என்.சுரேந்திரன் நடப்பு கூட்டத்தில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.
கேள்வி நேரத்தின் போது தடுப்புக்காவலில் பி.கருணாநிதி இறந்தது குறித்து சுரேந்திரன் முன்வைத்த கேள்விகளை சபாநாயகர் பண்டிகார் அமின் மூலியா நிராகரித்தார்.
எனினும், தொடர்ந்து அக்கேள்வியை சுரேந்திரன் கேட்டுக்கொண்டே இருந்ததால், அவையிலிருந்து சுரேந்திரனை வெளியேற்றுவதாக பண்டிகார் உத்தரவிட்டார்.
அவையிலிருந்து கோபத்துடன் வெளியேறிய சுரேந்திரன், கடந்த திங்களன்று தான் கூறியது போல் நாடாளுமன்றமன்றத்தில் சர்வாதிகாரம் நடப்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது என்று கூறினார்.