Home நாடு நாட்டில் இன்னும் கடுமையான சட்டங்கள் தேவை – மகாதீர் கருத்து

நாட்டில் இன்னும் கடுமையான சட்டங்கள் தேவை – மகாதீர் கருத்து

464
0
SHARE
Ad

Mahathirகோலாலம்பூர், செப் 27 – குற்றத்தடுப்பு  சட்டத்திருத்தம் குறித்து கருத்து கூறிய முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட், நாட்டிற்கு இன்னும் கடுமையான சட்டங்கள் தேவை என்று தெரிவித்துள்ளார்.

மகாதீர் ஆட்சி காலத்தில் தேசிய அளவில் பல முக்கியப் பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் விசாரணையின்றி தடுத்து வைக்கும் அதிகாரம் உண்டு என்பதால் பலர் இச்சட்டத்தின் மூலம் பல நாட்கள் சிறையில் இருந்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தற்போது அதே போன்றதொரு அதிகாரம் குற்றத்தடுப்பு சட்டத்தில் செய்யப்படுவதால் அது குறித்து மகாதீரிடம் இன்று கருத்து கேட்கப்பட்ட போது, “இந்த நாட்டுக்கும் இன்னும் கடுமையான சட்டங்கள் தேவை” என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் நீக்கப்பட்ட போது மகாதீர், பிரதமர் நஜிப் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.