இது குறித்து நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான்(படம்) நேற்று தனது டிவிட்டர் வலைத்தளத்தில் வெளியிட்ட தகவலில், “ரோன் 95 வகை எண்ணெய் விலையில் அரசாங்கம் கொடுக்கும் உதவித்தொகையில் மேலும் 10 காசு குறைக்கப்படும் என்ற வதந்தி முற்றிலும் தவறு. ரோன் 95 வகை எண்ணெய் விலை தொடர்ந்து அதே நிலையில் தான் இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
எண்ணெய் விலை உயரப்போவதாக நேற்று நாடெங்கும் வதந்திகள் பரவியது.
கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி, ரோன் 95 என்ற வகை பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 20 காசு உயர்த்தப்பட்டது. அதற்கு அடுத்த சில தினங்களில் ரோன் 97 வகை பெட்ரோலின் விலையும் லிட்டருக்கு 15 காசு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.