இவ்வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள குற்றத்தடுப்பு சட்டதிருத்தத்திற்கு எதிராக, நாட்டில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், மனு நிச்சயம் தாக்கல் செய்யப்படும் என்றும் சாஹிட் கூறியுள்ளார்.
“நீங்களே பாருங்கள்… இந்த சட்டதிருத்தம் அதிகார துஷ்பிரயோகத்தை தவிர்ப்பதற்காக அமைச்சர்களிடமிருந்து அதிகாரத்தை நீக்குகிறது” என்று இன்று புத்ரஜெயாவில் நடந்த குற்றத்தடுப்பு குறித்த கருத்தரங்கு ஒன்றில் சாஹிட் கூறினார்.
மேலும், “இந்த சட்டதிருத்தத்தின் படி, அரசாங்கம் அதிகாரத்தை மூன்று பேர் அடங்கிய குழுவான கூட்டரசு நீதிமன்ற நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு வழங்குகிறது”
“அவர்கள் தான், பதிவு செய்யும் குற்றங்களுக்கு ஏற்ற கைது ஆணையையும், கண்காணிப்பு உத்தரவுகளையும் வழங்குவார்கள்” என்றும் சாஹிட் தெரிவித்தார்.