Home நாடு “மகாதீரின் இருண்ட காலத்தை மீண்டும் கொண்டு வர வேண்டாம்” – நஜிப்புக்கு ஹிண்ட்ராப் எச்சரிக்கை

“மகாதீரின் இருண்ட காலத்தை மீண்டும் கொண்டு வர வேண்டாம்” – நஜிப்புக்கு ஹிண்ட்ராப் எச்சரிக்கை

532
0
SHARE
Ad

n-ganesanகோலாலம்பூர், செப் 27 – ஒரு காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி, தற்போது அதே அரசாங்கத்தில் அடங்கிய ஒரு இயக்கமாக செயல்பட்டு வரும் ஹிண்ட்ராப்,“மகாதீரின் இருண்ட காலத்தை” திரும்பக் கொண்டுவர வேண்டாம் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

குற்றத்தடுப்பு சட்டத்தில் திருத்தம் தேவை என்று அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு எதிராக ஹிண்ட்ராப் போராட்டம் நடத்தும் என்று அதன் தேசிய ஆலோசகரான என்.கணேசன் கூறியுள்ளார்.

மேலும், “குற்றத்தடுப்பு சட்டதிருத்தம் மூலம் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கம் திரும்பக் கொண்டு வருவதாக நாங்கள் நினைக்கின்றோம்”

#TamilSchoolmychoice

“கடந்த 2009 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக பல கட்சிகள் வளர்ந்ததை அடுத்து, நஜிப் தனது அணுகுமுறையை தளர்த்தினார். ஆனால் தற்போது மீண்டும் மகாதீரின் இருண்ட காலங்கள் அமைதி, பாதுகாப்பு என்ற பெயரில் திரும்ப வருவதாகத் தெரிகிறது”

“நாட்டில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட போதுமான சட்டங்கள் உள்ளன. காவல்துறை தனது செயல்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்”

“ஊழலும், நேர்மையின்மையும் தான் காவல்துறையில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை. எனவே அரசாங்கம் அதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் ஊழலைக் களையெடுத்து காவல்துறையை வலுப்படுத்த வேண்டும்” என்று கணேசன் கூறியுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் இந்த நியாயமற்ற, முறையற்ற மற்றும் கடுமையான சட்ட திருத்தத்தை கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை உடனடியாக அகற்ற வேண்டும்” என்று கணேசன் தெரிவித்துள்ளார்.