Home அரசியல் அடுத்த தேர்தலில் பக்காத்தான் வெற்றியடையும்! புத்ர ஜெயாவைக் கைப்பற்றுவோம்! – கர்பால் நம்பிக்கை

அடுத்த தேர்தலில் பக்காத்தான் வெற்றியடையும்! புத்ர ஜெயாவைக் கைப்பற்றுவோம்! – கர்பால் நம்பிக்கை

537
0
SHARE
Ad

anwarkarpal-642x427கோலாலம்பூர், செப் 30 – அடுத்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் கட்டாயமாக வெற்றி பெறும் என்று தான் நம்புவதாக ஜசெக தலைவர் கர்பால் சிங் கூறியுள்ளார்.

நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற பக்காத்தானின் சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கர்பால் சிங், வயது ஆவதற்குள் பக்காத்தான் தலைவர்கள் அனைவரும் மத்திய அரசாங்கத்தில் இடம் பெற்றுவிடுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், பக்காத்தானில் நிறைய இளைஞர்கள் பதவி வகிக்க வேண்டும் என்றும், தங்களுக்குப் பிறகு பக்காத்தானை வழிநடத்தும் சக்தி அவர்களிடம் தான் உள்ளது என்றும் கர்பால் சிங் கூறினார்.

#TamilSchoolmychoice

பக்காத்தானின் சாதனைக்கு பினாங்கு மாநிலம் ஒரு முன்னேற்றம் என்று கூறிய கர்பால், நாட்டின் இதர மாநிலங்களும் அதனைப் பின்பற்ற வேண்டும். இளைஞர்கள் அதிகாரத்தை பெறத் தயாராக வேண்டும் என்றும் கர்பால் சிங் கூறியுள்ளார்.