பாலி, செப் 30- பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே இந்தோனேசியாவில் நடந்த உலக அழகி போட்டியில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேகான் யங் உலக அழகியாக வெற்றி பெற்றார்.
இந்தியா சார்பில் போட்டியிட்ட அழகி நவ்னீத் கவுர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்தோனேசியாவில் 3 வாரங்களுக்கு முன்பு உலக அழகி போட்டி தொடங்கியது.
மேலும், சகோதரத்துவம், கலாசாரம் ஆகியவற்றை வலியுறுத்தி முஸ்லிம் இளம்பெண்களுக்கு என தனியாக உலக அழகி போட்டியும் நடத்தினர்.
எனினும், பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே உலக அழகி போட்டியின் இறுதி சுற்று, இந்துக்கள் அதிகம் வசிக்கும் பாலி தீவில் நேற்று நடந்தது.
கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட சீன அழகி வென்சியா யூ, அழகி பட்டத்தை மேகானுக்கு சூட்டினார். மருத்துவ மாணவிகள் பிரான்ஸ்சை சேர்ந்த மெரின் லார்ப் ஹெலின் (வயது 20), கானாவை சேர்ந்த கரான்ஷர் நா ஒஹாலி ஷூட்டர் (வயது 23) ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தனர்.
உலக அழகி பட்டத்தை இந்தியாவை சேர்ந்த ரீட்டா பரியா(1966), ஐஸ்வர்யா ராய்(1994), டயானா ஹைடன்(1997), யுக்தா முகி(1999), பிரியங்கா சோப்ரா(2000) ஆகியோரும் பிரபஞ்ச அழகி பட்டத்தை சுஷ்மிதா சென்(1994), லாரா தத்தா(2000) பெற்றுள்ளனர்.