Home நாடு “கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” – நஜிப்புக்கு ஹிண்ட்ராப் நினைவுறுத்தல்

“கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” – நஜிப்புக்கு ஹிண்ட்ராப் நினைவுறுத்தல்

689
0
SHARE
Ad

hindraf-1-607x410

கோலாலம்பூர், செப் 30 – பொதுத்தேர்தலுக்கு முன் செய்யப்பட்ட ஹிண்ட்ராப்புடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, அதிலுள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றுவதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் கொடுத்த வாக்குறுதியை, மீண்டும் ஒருமுறை அவருக்கு நினைவு படுத்தியிருக்கிறது ஹிண்ட்ராப் இயக்கம்.

இது குறித்து பினாங்கு மாநில ஹிண்ட்ராப் தலைவர் கலைசெல்வம் கூறுகையில், “வரும் 2014 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு தொடங்கிவிட்டது. நஜிப் கொடுத்த வாக்குறுதிப்படி ஹிண்ட்ராபின் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை நினைவுறுத்தியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “நிபுணர்கள் குழுவை அமைப்பது, நிதி ஒதுக்கீடு போன்ற 32 கோரிக்கைகளில் 31 கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பினால் பிரதமரிடமிருந்து மௌனம் மட்டுமே பதிலாக இருக்கிறது” என்றும் கலைசெல்வம் கூறியுள்ளார்.

இந்தியர்களின் வாக்குகளை திரும்பப் பெற முடியாது

நஜிப் ஹிண்ட்ராப்புக்கு கொடுத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். அப்படி இல்லையென்றால் அடுத்த தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளைத் திரும்ப பெறமுடியாது என்று கலைசெல்வம் கூறியுள்ளார்.

“வரும் 2014 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் ஹிண்ட்ராப் – தேசிய முன்னணியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் தேசிய முன்னணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத தவறிவிட்டது என்று அர்த்தம்”

“அப்படி ஒன்று நடந்தால், ஹிண்ட்ராப் இயக்கம் மற்றும் அதன் தலைவர் வேதமூர்த்தி ஆகியோர் அடுத்த தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளை திரும்பப் பெற்றுத் தரமாட்டார்கள்” என்று உறுதியாக கலைசெல்வம் கூறியுள்ளார்.