மும்பை, அக் 3 – மனச்சோர்வை நீக்கும் ஆபத்தான மூளை அறுவை சிகிச்சை, இந்தியாவில் முதன் முதலாக மும்பை தனியார் மருத்துவமனை ஒன்றில் வெற்றிகரமாக செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டு குணமானவர் ஒரு ஆஸ்திரேலியர். டிப்ரஷன் எனப்படும் மனச்சோர்வு நீக்கும் இந்த அறுவை சிகிச்சையின் பெயர் ‘டீப் ப்ரெயின் ஸ்டிமுலேஷன் சர்ஜரி’ (டிபிஎஸ்) என்று பெயர்.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த ஆபத்தான அறுவை சிகிச்சையை மருத்துவமனைகள் செய்கின்றன. ஆனால், செலவு அதிகம்.
15 ஆண்டுகளாகவே, பர்கின்சன், பக்க வாதம் போன்ற மூளை சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்க இந்த அறுவை சிகிச்சைன் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நாடுகள் வெளிநாட்டு நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சை யை செய்வதில்லை.
இந்தியாவில் இந்த அறுவை சிகிச்சையை செய்ய எந்த மருத்துவமனையும் முன்வரவில்லை. நோயாளிகளும் தயாரில்லை. இந்த அறுவை சிகிச்சைக்கு 7 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெஞ்சமின் வால்ட் என்பவர், கடந்த 6 ஆண்டுகளாக மனச்சோர்வு காரணமாக பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார். அவர் ஆஸ்திரேலி யாவில் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றால் அங்கு இந்த அரிய அறுவை சிகிச்சைக்கு அனுமதி இல்லை.
இதனால் இந்தியாவிற்கு வந்த அவருக்கு, தனியார் மருத்துவமனை ஒன்று அறுவை சிகிச்சை செய்ய முன்வந்து அதை வெற்றிகரமாக நடத்தியும் காட்டியிருக்கிறது.