Home கலை உலகம் தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழாவில் மலேசிய இயக்குநர் பிரகாஷின் ‘வெண்ணிற இரவுகள்’

தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழாவில் மலேசிய இயக்குநர் பிரகாஷின் ‘வெண்ணிற இரவுகள்’

530
0
SHARE
Ad

1381528_235004699988411_1848039797_nசென்னை, அக் 3 – சென்னையில் நேற்று செவன்த் சேனல் கம்யூனிகேஷன், தமிழ் திரைப்பட அகடமி, ரஷிய கலாச்சார மையம் ஆகியவை இணைந்து சர்வதேசத் திரைப்பட விழாவை தொடங்கினர்.

இவ்விழா நேற்று தொடங்கி, வரும் அக்டோபர் 4 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இவ்விழாவை இயக்குனர் வெற்றிமாறன் தொடங்கி வைத்தார்.ரஷிய கலாசார மைய இயக்குனர் மிக்கேல் கோர்படாவ், இந்தோ ,ரஷ்ய கலாசார மையத்தின் தங்கப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ஜெர்மனியை சேர்ந்த குளோரியானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நமது மலேசிய இயக்குநர் ஆர்.பிரகாஷ் ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதோடு, அவரது புதிய படமான ‘வெண்ணிற இரவுகள்’ திரையிடப்படவிருக்கிறது.

#TamilSchoolmychoice

இப்படம் வரும் நவம்பர் மாதம் 7 ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்விழாவில் நமது மலேசிய நடிகை சங்கீதா கிருஷ்ணசாமி, நடிகர் மஹின் விகடகவி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சங்கீதா குத்துவிளக்கு ஏற்றி இவ்விழாவை துவக்கி வைத்தார்.