Home வாழ் நலம் பிரசவத்திற்குப் பின் கவனிக்க வேண்டியவை!

பிரசவத்திற்குப் பின் கவனிக்க வேண்டியவை!

525
0
SHARE
Ad

child5அக்டோபர் 3 – ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய காலகட்டம் என்றால் அது தாய்மைப் பருவம் தான். குழந்தை பெற்ற பிறகு, அது சுகப்பிரசவமானால் 1 மாதமும், அறுவை சிகிச்சை என்றால் 3 மாதங்களும் ஓய்வு அவசியம்.

பிரசவித்த பெண் முழுமையாக மனதளவிலும்,உடலளவிலும் பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தது 18 மாதங்கள் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அறுவை சிகிச்சை என்றாலும் சுகப்பரசவம் என்றாலும் சரி அதிக கணம் கொண்ட பொருட்களை தூக்குவது கூடாது. அது உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

#TamilSchoolmychoice

குழந்தைக்கு முதலில் தாய் பால் தான் தரவேண்டும். தாய்பாலைவிட சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை. பிறந்த குழந்தையை தாயின் உடலோடு இணைத்து அந்த சூட்டில் குழந்தையை படுக்க வேண்டும்.

குழந்தை பெற்ற உடன் அனேகப் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளவு சற்றே
குறைகிறது.

மேலும் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கிறது. சருமம் பொலிவிழக்கிறது.
அவர்களது ஒட்டுமொத்த தோற்றமுமே மாறிப் போகிறது.

இதெல்லாம் 18 மாதங்களுக்குப் பிறகு சகஜ நிலைக்குத் திரும்பும் அதுவரை பொறுமை அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.