Home நாடு சுங்கை லிமாவ் சட்டமன்ற தொகுதியில் வரும் நவம்பர் 4 ல் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்...

சுங்கை லிமாவ் சட்டமன்ற தொகுதியில் வரும் நவம்பர் 4 ல் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

617
0
SHARE
Ad

MBகோலாலம்பூர், அக் 3 –  சுங்கை லிமாவ் சட்டமன்ற உறுப்பினர் அஸிஸான் அப்துல் ரசாக் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

வரும் அக்டோபர் 23 ஆம் தேதி வேட்பாளர் நியமனம் நடைபெற்ற பின்னர், தேர்தல் பிரச்சாரம் 12 நாட்கள் தொடரும்.

அதன் பிறகு நவம்பர் 4 ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் சுங்கை லிமாவ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அஸிஸான், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஃபாசில்லா முகமட் அலி மற்றும் இரு சுயேட்சை வேட்பாளர்களை தோற்கடித்து, 13, 294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆனால் தீவிர நீரிழிவு நோயின் காரணமாக அஸிஸானுக்கு கடந்த மே மாதம் இரண்டு கால்களையும் முட்டிக்கு கீழ் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன்பிறகும், நோயில் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த அஸிஸான் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி  சுல்தானா பாஹியா மருத்துவமனையில் காலமானார்.

இதனால் அவரது தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.