கோலாலம்பூர், அக் 3 – உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை நீக்கிய போது, குற்றங்கள் இனி விஸ்வரூபம் எடுக்கும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
குற்றத்தடுப்பு சட்டதிருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அது குறித்து கருத்துத் தெரிவித்த மகாதீர், “ உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை நீக்குவதாக நஜிப் வாக்குறுதி அளித்தது உண்மை தான். ஆனால் அதன் பின்னர் குற்றங்கள் இந்த அளவு பெருகும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். நானும் எதிர்பார்க்கவில்லை. நீங்களும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்” என்று மகாதீர் கூறினார்.
மேலும், நாட்டில் குற்றங்கள் அதிகரித்து எங்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும், அதைத் தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் தேவை என்றும் மகாதீர் தெரிவித்தார்.