கோலாலம்பூர், அக் 9 – காவல்துறை முதலில் சுடும் பிறகு தான் விசாரணை செய்யும் என்று உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி சட்டத்திற்குப் புறம்பாக கருத்து கூறியிருந்தாலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்று முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“சாஹிட் அரசாங்கத்தின் கொள்கையைத் தான் விவரித்திருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலாது” என்றும் ஜைட் கூறியுள்ளார்.
“மக்களால் என்ன செய்ய முடியும் என்றால் அவர் இருக்கும் அரசாங்கத்தை புறக்கணிக்க முடியும். அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்” என்று ஜைட் குறிப்பிட்டுள்ளார்.
“எனினும் உள்துறை அமைச்சரான சாஹிட்டின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மிகவும் பிரபலம். துர்அதிர்ஷ்டவசமாக அம்னோவிற்கும் அவரது கருத்துக்கள் பிடித்துவிடுகிறது. அதனால் அவர் மேலும் பிரபலமடைந்துவிட்டார்” என்றும் ஜைட் தெரிவித்துள்ளார்.