இரண்டாம் உலகம் படத்தை இரண்டு வருடங்களாக இயக்கி வரும் செல்வராகவன் அப்படம் வெளியாவதற்குள் 2 குழந்தைகளுக்கு தந்தையாகிவிட்டார்.
அப்படத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ளனர். இரண்டாம் உலகம் படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு நடந்தபோது செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
அந்த குழந்தைக்கு லீலாவதி என பெயரிட்டனர். இதையடுத்து மீண்டும் கீதாஞ்சலி கர்ப்பம் அடைந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் அவர் ஆண் குழந்தை பெற்றார்.
இது பற்றி செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ஆண்டவன் அருளால் குழந்தை பிறந்தது. எனக்கு ரசிகர்கள் வழங்கி வரும் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி என்றார்.
இரண்டாம் உலகம் படப்பிடிப்பு தொடங்கி, அது வெளியாவதற்குள் 2 குழந்தைகளுக்கு செல்வராகவன் அப்பா ஆனது குறிப்பிடத்தக்கது.