Home உலகம் வியாழனை விட பெரிய கோள் கண்டுபிடிப்பு!

வியாழனை விட பெரிய கோள் கண்டுபிடிப்பு!

814
0
SHARE
Ad

SigurdssonMandel1லண்டன், அக் 9 – பால்வெளியில், புதிய கோள் ஒன்றை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். பூமியிலிருந்து, 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோள், வியாழன் கோளைவிட, எட்டு மடங்கு பெரியது என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

பால்வெளி அண்டத்தில் நடைபெறும் மாற்றங்கள் குறித்தும், கோள்கள் உருவான விதம் குறித்தும், விண்வெளி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவ்வப்போது, வான்வெளியில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து, இவர்கள் தகவல் தெரிவிப்பது வழக்கம்.

வால் நட்சத்திரங்களின் தோற்றம், அவற்றின் பயணம் போன்ற பல தகவல்களை, ஆய்வாளர்கள் தந்துள்ளனர். வான்வெளியில் கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, முதன் முதலாக, 2011ம் ஆண்டு, புளூட்டோவுக்கு அப்பால் ஒரு கோள் இருப்பது தெரிந்தது.

#TamilSchoolmychoice

தொடர்ந்து இதைப்பற்றிய ஆய்வில் ஈடுபட்டபோது, ஜப்பான், நியூசிலாந்து, போலந்து மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகளிலிருந்தும், இந்த கோள் தென்பட்டது. இதையடுத்து, புதிய கோள் இருப்பதை உறுதி செய்ய, ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டனர். இதன் பயனாக, பூமியிலிருந்து, 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில், வியாழன் கோளைவிட, எட்டு மடங்கு பெரிய கோள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஆய்வாளர்கள் இது குறித்து கூறுகையில்,  “வான்வெளியில் புதிய கோள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இக்கோளானது, ‘எம்.ஓ.- ஏ.2011 – பி.எல்.ஜி. – 322’ என, பெயரிடப்பட்டு உள்ளது. இதன் சுற்று வட்டப்பாதை குறித்து, ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.