Home நாடு இன்று உலக அஞ்சல் தினம் – கே.எஸ்.செண்பகவள்ளி

இன்று உலக அஞ்சல் தினம் – கே.எஸ்.செண்பகவள்ளி

985
0
SHARE
Ad

1385942_707539662608425_680587873_nஅக்டோபர் 9 – 1874ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதியன்று சுவிசர்லாந்து ‘பேர்ன்’ நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட நாளை, உலக அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. அஞ்சல் தினம் இன்றோடு 139 ஆண்டுகளைத் தொட்டு விட்டது.

“உலகின் பல்வேறு நாடுகளுக்கும் உரிய புவியியல்அரசியல்மதம் போன்ற பல்வேறு எல்லைகளையும்தடைகளையும் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்குரிய பிரத்தியேகமானதும்மிகப் பெறுமதி வாய்ந்ததுமான தகவல்களையும்,பொருட்களையும் எம்மிடம் ஒப்படைப்பதுஅவற்றைப் பாதுகாத்து மிக வேகமாகவும் மிகக் கவனத்துடனும் அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார்கள் என்ற எம்மீதுள்ள பெரு நம்பிக்கை என்பதை நாம் அறிந்துள்ளதோடு அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற் திறமையுடனும்நேர்மையுடனும்பாதுகாப்புடனும் இரகசியத் தன்மையைப் பேணி அவர்களுடைய தகவல்களையும்பொருட்களையும்உரிமைகளையும் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்நேற்றைய தினத்தை விட நன்றாக இன்றைய தினத்திலும்இன்றைய தினத்தை விட நன்றாக நாளைய தினத்திலும் திறமையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணத்துடன் செயற்படுவோம்” என உலக அஞ்சல் தினம் பிரகடனம் செய்யப்பட்டது.

மலேசிய அஞ்சல் துறையில் துன்.வீ.தி.சம்பந்தனின் பங்கு

#TamilSchoolmychoice

நம் நாட்டில் அஞ்சல் துறையில் பெரும் அர்ப்பணிப்பை ஏற்படுத்தியவர் மாமனிதர் துன் வீ.தி.சம்பந்தன். 1959ஆம் ஆண்டு முதல் 1969ஆம் ஆண்டு வரை மராமத்து(பொதுப்பணி), அஞ்சல், தந்தித்துறை அமைச்சராகப் பொறுபேற்ற காலக்கட்டங்களில் அவரின் சேவைகள் அளப்பரியன. பல புதிய செயல்முறைத் திட்டங்களை அமலுக்குக் கொண்டு வந்தவர். 1960ஆம் ஆண்டுகளில் சைக்கிள் வண்டி மூலமாக அஞ்சல்கள் அனுப்பப்பட்டதால், கடிதங்கள் உரியவரிடம் சென்றடைய தாமதம் ஏற்பட்டது. எனவே, துன் வீ.தி.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சனையைக் கொண்டுச் சென்றார். 1961ஆம் ஆண்டு முதலாக மோட்டார் வண்டி வாயிலாக கடிதங்கள் சேர்ப்பிக்கப்பட்டன.

துன் சம்பந்தன் கிராமம், தோட்டப்புறங்களில் அஞ்சல் சேவைகளை விரிவுப்படுத்தினார். அஞ்சல் நிலையமோ, நடமாடும் அஞ்சல் நிலையமோ இல்லாத கிராம, தோட்டப்புறங்களில் அஞ்சல் நிலையம் நிர்மாணிக்கவும் முயற்சித்தார். அன்றைய காலக்கட்டங்களில், தோட்டப்புற அலுவலக பணியாளர்கள் மூலம், கடிதங்கள் கொண்டுச் செல்லப்பட்டன. 1962ஆம் ஆண்டு, நாடு தளுவிய நிலையில் மூவார், சபாக் பெர்ணம், கோலாலம்பூர், கோலா லிப்பிஸ், மலாக்கா, போர்ட் டிக்சன், தானா மேரா, பெக்கான், தாப்பா ஆகிய ஒன்பது இடங்களில் நடமாடும் அஞ்சல் நிலையங்களை நிர்மாணித்தார். அதனைத் தொடர்ந்து மேலும் பல இடங்களில் 42 நடமாடும் அஞ்சல் நிலையங்களை நிர்மாணித்தார். ஆனால், நடமாடும் அஞ்சல் சேவைகள் அதிக செலவுகளுக்குட்பட்டதால், அரசாங்கத்தின் ஆணைப்படி, 1963ஆம் ஆண்டு 64 அஞ்சல் நிலையங்களை நாடு தளுவிய நிலையில் நிர்மாணித்தார்.

அஞ்சல்துறையின் சேவைகளை விரிவாக்குவதற்காக, 1962ஆம் ஆண்டு, கோலாலம்பூரில் அஞ்சல் துறை தலைமையகத்தை நிறுவ முயற்சி செய்தார். பல இடர்பாடுகளுக்கிடையில் அஞ்சல் துறை தலைமையகம் நிர்மாணிக்கப்பட்டது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 1970ஆம் ஆண்டுகளில் நாட்டில் பல இடங்களில் அஞ்சல் நிலைய கட்டிடங்கள் நிறுவப்பட்டன.

துன் சம்பந்தன் அஞ்சல் நிலையங்களை மட்டும் விரிவாக்கம் செய்யாமல், அஞ்சல்தலைகளையும் புதுக்கோணத்தில் கொண்டு வந்தார். நுணுக்கமாகவும், புதிய வடிவிலான, வண்ணத்திலான அஞ்சல் தலைகளை உருவாக்கி, உலகப்பார்வைக்குக் கொண்டுச் சென்றார். 1970ஆம் ஆண்டு வண்ணத்துப்பூச்சிப் படத்தைக் கொண்டு உருவாக்கிய தபால் தலை Indian National Philatelic Exhibition கண்காட்சியில் வெள்ளிப் பரிசுப் பெற்றது. புதிய அஞ்சல்தலைகளின் வருகையால், அஞ்சல் தலைகள் சேகரிக்கும் ஆர்வமும் மக்களிடையே பெருகியது1385597_707539802608411_675818023_n-200x300

துன் சம்பந்தனாரின் மற்றொரு சாதனை ‘முதல் நாள் தபால் உறை’ (Sampul Surat Hari Pertama) அதாவது மலேசியாவின் வரலாற்று சம்பவங்களை இந்த அஞ்சல் உறைகளில் பதிப்பிட்டார். 1969ஆம் ஆண்டு, இரண்டு விதமான அஞ்சல் உறைகளையும், 1970ஆம் ஆண்டு ஆறுவிதமான அஞ்சல் உறைகளையும், 1971ஆம் ஆண்டு நான்கு விதமான அஞ்சல் உறைகளும் வெளியிடப்பட்டன. இதில் துன் சம்பந்தனின் அரிய முயற்சியால், குவாந்தானில் துவக்கப்பட்ட துணைக்கோள் திறப்புவிழா படம் 1970ஆம் ஆண்டு அஞ்சல் உறையில் பதிப்பிக்கப்பட்டது வரலாற்று சிறப்பிற்குரியது.

மலேசிய அஞ்சல் துறையின் தந்தை துன் வீ.தி சம்பந்தன் என்பதில் மிகையில்லை. 60ஆம் ஆண்டுகளில் இத்துறையில் இவர் ஆற்றிய சேவைகளை, அர்ப்பணிப்புகளை மலேசியர்களாகிய நாம் என்றென்றும் நினைவிற் கொள்ள வேண்டும். 139ஆம் ஆண்டு உலக அஞ்சல் தினத்தில் துன் சம்பந்தனாரை நினைவுக்கூர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.!